“சிறந்த விளையாட்டு தருணங்களை கொடுத்தவர்“ : மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

26 November 2020, 10:26 am
Modi condelence - Updatenews360
Quick Share

அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளராக இருந்த, இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 கேப்புகளைப் பெற்றுள்ளார் மற்றும் 34 கோல்களை அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றி பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார், மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மரடோனா, வீட்டில் சிகிச்சையில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அவரது வாழ்க்கை முழுவதும், அவர் கால்பந்து மைதானத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை எங்களுக்குக் கொடுத்தார் எனவும், அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Views: - 0

0

0