‘இந்தியாவை வலிமையாக்க தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கலாம்’: பிரதமர் மோடி புகழாரம்..!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 12:26 pm
Quick Share

புதுடெல்லி: இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 90வது பிறந்த தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ஏவுகணை நாயகனாக அறியப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அப்துல் கலாம் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 272

0

0