உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

8 September 2020, 8:50 am
Quick Share


ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப அதிவேக ஏவுகணை சோதனை நேற்று ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டும் முயற்சியாக, அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக உள்நாட்டிலேயே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை நேற்று நடத்தப்பட்டது வெற்றியடைந்துள்ளது.

இதற்கு முன்பு, ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. தற்போது அந்த வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என ஏராளமானோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எச்.எஸ்.டி.டி.வி. சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், வெற்றிகரமான ஹைபர்சோனிக் செயல்முறை வாகன பரிசோதனைக்காக இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பாராட்டுகள்.

நமது விஞ்ஞானிகள் வடிவமைத்த ஸ்கிராம்ஜெட் என்ஜினால் ஒலியை விட 6 மடங்கு வேகத்தை ஏவுகணை பெற்றுள்ளது. இன்று, இந்த திறனை மிகச்சில நாடுகளே பெற்றிருக்கின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 8

0

0