அயோத்தி வளர்ச்சி திட்டம்: யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!!

Author: Aarthi Sivakumar
26 June 2021, 9:06 am
Quick Share

புதுடெல்லி: அயோத்தி வளர்ச்சி திட்டம் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோவில் கட்டப்படுவதை முன்னிட்டு அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரவுள்ளன. உத்தரப் பிரேதச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து எளிதில் வருவதற்காக விமான மற்றும் ரெயில் சேவைகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ayothi tour - updatenews360

இந்நிலையில் அயோத்தி நவீனமயமாக்கும் திட்டம், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட வருங்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு இன்று காணொலி மூலம் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளிக்கவுள்ளார்.

Views: - 232

0

0