உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற குடிநீர் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

22 November 2020, 9:10 am
PM_Modi_17th_ASEAN_Summit_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

உத்தரப்பிரதேச விந்தியா பிராந்தியத்தில் உள்ள மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களின் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11:30 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்க உள்ளார்.

yogi_adityanath_updatenews360 (3)

இந்நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, கிராம நீர் மற்றும் துப்புரவு குழு உறுப்பினர்களுடன் உரையாடுவார். இந்த திட்டங்கள் 2,995 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து கிராமப்புற வீடுகளிலும் வீட்டு குழாய் நீர் இணைப்புகளை வழங்கும், மேலும் இந்த மாவட்டங்களில் சுமார் 42 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5,555.38 கோடி மதிப்புள்ள திட்டங்கள் ‘ஜல் ஜீவன்’ மிஷனின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் அனைத்திலும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் மற்றும் பானி சமிதி ஆகியவற்றை அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த குழுக்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 24

0

0