அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…!!

23 November 2020, 4:07 pm
modi video conf - updatenews360
Quick Share

புதுடெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்து, அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நாளை (24.11.2020) மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், வட மாநிலங்களின் பல நகரங்களில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 19

0

0