‘சன்சத்’ டிவி சேனல்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!!

Author: Aarthi
14 September 2021, 7:18 pm
Quick Share

புதுடெல்லி: சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில், மன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப இரண்டு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வந்தன. இதில் லோக்சபா டிவி மக்களவை நிகழ்வுகளையும், ராஜ்யசபா டிவி மாநிலங்களவை நிகழ்வுகளையும் ஒளிபரப்பி வந்தன. இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் ஒன்றிணைக்க, குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இணைந்து குழு ஒன்றை அமைத்தனர்.

வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய். | Seithy.com - 24 Hours  Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking  news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu ...

அந்தக் குழு, இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு தொலைக்காட்சிகளும் தற்போது இணைக்கப்பட்டு அதற்கு சன்சாத் டி.வி (SANSAD TV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர். சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்,கொள்கைகளின் அமலாக்கம் போன்றவை ஒளிபரப்பாகும். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.

Views: - 122

0

0