82வது மன் கி பாத்: நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 11:45 am
mann ki batt
Quick Share

புதுடெல்லி: 82வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ‘மன் கி பாத்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் அவர் யோசனையும் கேட்டு வருகிறார். அந்தவகையில் இன்று ஒலிபரப்பாகும் இந்த மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்ச்சிக்கு யோசனை வழங்குமாறு நாட்டு மக்களை அவர் கேட்டிருந்தார்.

Image

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் 24ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒலி பரப்பாகிறது. இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் 82வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

Views: - 232

0

0