“கல்விக் கொள்கை, கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது” : பிரதமர் மோடி உரை..!

7 September 2020, 12:19 pm
Quick Share

புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில ஆளுநர்களுடன் நடைபெற்ற குடியரசுத்தலைவர் மாநாட்டில் பிரமர் மோடி உரையாற்றினார்.

இந்தியாவில் கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தேசிய கல்வி கொள்கை. பின்னர் 1992-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுயளிக்கப்பட்டு இருந்தது.

முந்தைய பிரமதர் மோடி அரசில் ஸ்மிரிதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த போது, புதிய தேசிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான முயற்சிகளை பாரதீய ஜனதா அரசு தொடங்கியது.

பின்னர் இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, கடந்த ஆண்டு மே 31ந்தேதி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் வழங்கியது.

பன்மொழி கல்வியை ஊக்குவித்தல், உலகில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வி முறை, கற்பித்தலில் புதிய முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்று உள்ளன.

பின்னர் அந்த அறிக்கை, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வந்தன.

தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜூலை 29-ஆம்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் மனித மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை ‘கல்வி அமைச்சகம்‘ என பெயர் மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டது

புதிய கல்விக்கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது.

கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு கொடுத்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் கருத்துருக்கள் பெறப்படுள்ளன.

இதனையடுத்து புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ‘உயர்கல்வி மேம்பாட்டில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் இன்று மாநாடு நடைபெற்று.

மாநில ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த மாநாட்டில் ராஜ்பவனில் இருந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.

இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஆளுநர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கல்விக் கொள்கை மற்றும் கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது” என குறிப்பிட்டார். மேலும், “மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு” என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Views: - 0

0

0