“உங்களை நாடு என்றும் நினைவில் கொள்ளும்” – வாஜ்பாய் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி ட்வீட்..!

16 August 2020, 10:25 am
Quick Share

மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அடல்பிகாரியின் வீடியோவை பதிவிட்டு அதன் உடன் மக்களுக்காகவும், நாட்டின் முன்னேற்த்திற்காகவும் நீங்கள் ஆற்றிய சேவை என்றும் நினைவில் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் என பலரும் அடல்பிஹாரி வாஜ்பாயிக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Views: - 40

0

0