சர்வதேச எரிசக்தி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று விருது வழங்கப்படுகிறது..!!

5 March 2021, 8:21 am
new modi - updatenews360
Quick Share

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று நடைபெறும் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1983ம் ஆண்டு டேனியல் எர்ஜின் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த 2016ம் அண்டு முதல் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பிரதமர் மோடி இன்று பெற்றுக்கொள்கிறார்.

இந்த நிகழ்வில் அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய உரையும் ஆற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்த தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு, எரிசக்தி அணுகல், மலிவு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகளை வழங்குதலை இந்த விருது அங்கீகரிப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 9

0

0