‘வள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை’: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!

Author: Aarthi Sivakumar
15 January 2022, 10:48 am
Quick Share

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில், திருக்குறள்களைப் பதிவிட்டு திருவள்ளுவரின் பெருமையை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கூறியதாவது, திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.

திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன.

கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Views: - 185

0

0