பிரியங்கா காந்தி தலைமையில் மூன்று பேர் குழு..? சச்சின் பைலட் புகாரை விசாரிக்க காங்கிரஸ் ஏற்பாடு..!

12 August 2020, 1:21 pm
Sachin_Pilot_UpdateNews360
Quick Share

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் எழுப்பிய புகார்கள் குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பிரியங்கா காந்தி வாத்ரா, அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் அவர் எழுப்பிய குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பைலட்டுக்கு உறுதியளித்திருந்தார். திங்கள்கிழமை இரவு பைலட் மற்றும் அவரது எம்.எல்.ஏக்கள் பிரியங்கா காந்தி வாத்ரா, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பிற தலைவர்களை டெல்லியில் சந்தித்த பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் நீண்டகால அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது.

கெலாட்டுக்கு எதிராக பைலட் கிளர்ச்சி செய்த பின்னர் தொடங்கிய அரசியல் மோதலின் முடிவு, ஆகஸ்ட் 14 அன்று ராஜஸ்தானில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே வருவது முக்கியத்துவம் பெறுகிறது.

எனினும், பைலட் மீண்டும் மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா என்பதையும், கட்சியில் அவரது பதவிகள் மீட்டமைக்கப்படுவது குறித்தும் தற்போதுவரை எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

“முதல் நாளிலேயே, நாங்கள் கட்சியில் எங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம் என்று தான் கூறினோம். கட்சி அல்லது கட்சித் தலைமைக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் பேசவில்லை அல்லது எதுவும் செய்யவில்லை. உண்மையில், பலர் வதந்திகளைப் பரப்பி பல கேள்விகளை எழுப்பினர். ஆனால் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம்.” என பைலட் ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் திரும்பியதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கவலை இல்லை என்பதால், மாநிலத்தை ஆளும் அசோக் கெலாட் நிம்மதியாக உள்ளார்.

Views: - 7

0

0