கார் மீது லேசாக உரசிய பழவண்டி…பப்பாளிகளை பந்தாடிய பேராசிரியை: அப்பாவி வியாபாரிக்கு வலுக்கும் ஆதரவுக்குரல்..!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
11 January 2022, 5:15 pm
Quick Share

மத்தியபிரதேசம்: போபாலில் தனது கார் மீது பழவண்டி ஒன்று லேசாக உரசியதால் ஆத்திரமடைந்த பெண் வண்டியில் இருந்த பழங்கள் அனைத்தையும் சாலையில் தூக்கியெறியும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டரில் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை கோபமடையச் செய்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டுள்ள பழங்களை கோபத்துடன் சாலையில் வீசியெறிகிறார்.

இதன் பின்னணியில் உள்ள விஷயம் என்னவென்றால், அந்த பெண் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரின் மீது தள்ளுவண்டி ஒன்று லேசாக உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் காரை விட்டு இறங்கிய, தள்ளுவண்டி பழ வியாபாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் அந்த பெண் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் அனைத்தையும் சாலை வீசியெறிகிறார். மேலும், சாலையில் செல்லம் வாகன ஓட்டிகளிடம் புகாரும் செய்கிறார். இதற்கிடையே அந்த அப்பாவி வியாபாரி எவ்வளவு கெஞ்சியும் மனமிறங்காத பெண் பழங்களை சேதப்படுத்துவதிலேயே மும்மரம் காட்டுகிறார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோவா பதிவு செய்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ போபாலில் எடுக்கப்பட்டதாகவும், அந்த பெண் ஒரு பேராசிரியர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து, வியாபாரிக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Views: - 297

0

0