போலீஸ் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகள்..! டெல்லிக்குள் அத்து மீறி நுழைவதால் பரபரப்பு..!

26 January 2021, 10:29 am
Farmers_Protest_UpdateNews360
Quick Share

டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் குழுக்கள் இன்று காலை போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் அடாவடியாக நுழைந்து வருகின்றனர். 

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் தங்களது டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுத்து வைக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“ஆனால் விவசாயிகளின் சில குழுக்கள் இதை ஏற்காமல் போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி வெளி வட்ட சாலையை நோக்கி செல்லத் தொடங்கின” என்று ஒரு அதிகாரி கூறினார்.

இதற்கிடையே டெல்லியின் பல எல்லைப் புள்ளிகளில் மூன்று மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 41 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சங்க்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினர், தடுப்புகளை உடைத்தவர்கள் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றார்.

போலீசார் விவசாயிகளுக்கு உரிய வழிகளை திறந்துவிட்டபின், சன்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் டிராக்டர் அணிவகுப்பு திட்டமிட்டபடி தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு இன்று டெல்லியின் பரபரப்பான வெளி வட்ட சாலையில் தடையை மீறி தங்கள் அணிவகுப்பை நடத்துவதாக அறிவித்தது.

இதற்கிடையே மூன்று புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்வது உட்பட தங்கள் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1’ஆம் தேதி, பாராளுமன்றத்திற்கு பேரணியாக செல்ல உள்ளதாக மற்றொரு போராட்டத்தை அறிவித்துள்ளன.

சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைப் புள்ளிகளிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியான கிசான் கந்தந்திர அணிவகுப்பைக் கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Views: - 5

0

0