டெல்லியை மேலும் கவலைக்குள்ளாக்கும் காற்று மாசு: பொதுமக்கள் கடும் அவதி..!!

5 November 2020, 10:29 am
delhi air pollution - updatenews360
Quick Share

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. அதிகரிக்கும் வாகன புகை மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகையும் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணமாகிறது.

காற்று மாசுவால் டெல்லியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்றில் மாசு அதிகரிப்பதால், அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ என அழைக்கப்படும் காற்று தர சுட்டெண் 458 ஆக இருந்தது. இதன் அளவு 50 என்ற அளவில் இருந்தால் தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

இந்த காற்று மாசுபாடு காரணமாக, மக்களுக்கு சுவாச பிரச்சனை தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 26

0

0