புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை – புதுச்சேரி முதலமைச்சர்…!!

18 October 2020, 5:33 pm
Pondy Narayanasamy - updatenews360
Quick Share

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம் என்றும், கொரோனா பாதிப்பு குறைந்து புதுச்சேரி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் இன்று புதிதாக 177 பேருக்குக் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.