ஆத்மநிர்பர் பாரத் : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு லாஞ்சர்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைப்பு..!

12 August 2020, 7:39 pm
40 mm UBGL (UNDER BARREL GRENADE LAUNCHER) AMMUNITION BY AFK, PUNE_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரத் அழைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் புனேவின் கட்கியில் உள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை, இன்று உள்நாட்டு தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளில் பொருத்தப்படும் 40 மி.மீ. கையெறி குண்டு லாஞ்சர்களின் (யுபிஜிஎல்) முதல் பேட்ச்சை எல்லை பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைத்துள்ளது. 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைப்பின் நாக்பூர் மக்கள் தொடர்பு செயலாளர் தனது ட்விட்டர் பதிவில், புனே வெடிமருந்து தொழிற்சாலை உள்நாட்டு 40 மிமீ யுபிஜிஎல்லின் முதல் சரக்குகளை பிஎஸ்எஃப்’க்கு அனுப்பியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“இதன் மூலம், புனேவின் வெடிமருந்து தொழிற்சாலை, ஆகஸ்ட் 11, 2020 அன்று, 40 மிமீ யுபிஜிஎல் வெடிமருந்து உற்பத்தியின் மூலம் சுயசார்பு மற்றும் சுதேசமயமாக்கல் பற்றிய புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது” என்று அந்த டிவீட்டில் மேலும் கூறினார்.

இந்த வெடிமருந்துகள் 5.56 மிமீ ரைபிள் (ஐஎன்எஸ்ஏஎஸ்) துப்பாக்கிகளின் கீழ் பொருத்தப்பட்ட ஒரு லாஞ்சரிலிருந்து சுடப்படுகின்றன. 40 மிமீ யுபிஜிஎல் வெடிமருந்துகள் பாரம்பரிய கையெறி குண்டுக்கு மேல் பல நன்மைகளைக் கொண்டுள்ளன.

சாதாரண கையெறி குண்டுகள் 30 மீட்டருக்கு வீசப்படும் நிலையில் இந்த லாஞ்சர்கள் மூலம் 400 மீட்டர் வரை இலக்குகளைக் குறிவைத்து வீச முடியும். இது வீரர்கள் தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த லாஞ்சர்களில் 40 மிமீ யுபிஜிஎல் (பயிற்சி), 40 மிமீ யுபிஜிஎல் (ஹெச்ஏபி), 40 மிமீ யுபிஜிஎல் (எச்இடிபி), 40 மிமீ யுபிஜிஎல் (ஆர்.பி.) என நான்கு வகைகள் உள்ளன.  40 மிமீ யுபிஜிஎல் அமுனிஷன் இந்திய தொழில்துறையிலிருந்து பெறப்பட்ட கூறுகளுடன் கட்கி என்ற வெடிமருந்து தொழிற்சாலையால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த லாஞ்சர்களை முன்னதாக இந்திய ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகம் இறக்குமதி செய்துள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசு ராணுவத்தில் இருக்குமதியைக் குறித்து உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது..

Views: - 9

0

0