எல்லை மீறும் கொரோனா நிலைமை..! புனே நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு..!

Author: Sekar
12 March 2021, 3:20 pm
Corona_Cases_Pune_UpdateNews360
Quick Share

கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால், புனே நிர்வாகம் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க, பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே புனேவில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின்போது, ​​புனேவில் உள்ள பள்ளிகள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. 

பள்ளிகளைத் திறக்கலாமா வேண்டாமா என்ற முடிவு, மார்ச் 31’ஆம் தேதிக்குப் பிறகு உள்ள சூழ்நிலையைப் பொறுத்து பின்னர் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் புனேவில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மூலம் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் சினிமா அரங்குகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க முடியும். இரவு 11 மணி வரை வீட்டு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 பேர் மட்டுமே ஒரு கடைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதே போல் திருமண விழாக்களில் விருந்தினர்களின் எண்ணிக்கையும் 50 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளுக்கு போலீஸ் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புனேவில் நேற்று மட்டும் புதிதாக 2,840 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரின் ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,28,344’ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 9,356’ஐ எட்டியது. 

Views: - 63

0

0