டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறிய பஞ்சாப் முதலமைச்சர்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 9:31 am
Quick Share

பஞ்சாப்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது கையால் உணவு சமைத்து பரிமாறினார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், தனது பண்ணை வீட்டில் இரவு விருந்து அளித்தார்.

வீரர்களுக்கான மட்டன், சிக்கன் குழம்பு போன்ற உணவுகளை முதலமைச்சரே சமைத்து அசத்தினார். இரவு விருந்தில் அவரே வீரர்களுக்கு உணவு பரிமாறினார்.

பஞ்சாப் வீரர்களுடன், ஹரியானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் விருந்தில் கலந்துகொண்டார். முதலமைச்சர் அமரீந்தர் சிங் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 423

0

0