எடுபடாமல் போன அமரீந்தரின் எதிர்ப்பு : காங்., தலைவராகும் சித்து… பஞ்சாப் காங்கிரசிஸ் ‘கலகல’

17 July 2021, 1:03 pm
Amarinder Singh - sidhu - updatenews360
Quick Share

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு சித்துவிற்கு வழங்கும் மேலிடத்தின் முடிவிற்கு அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் முதலமைச்சர் அமரீந்தர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவ்ஜோத் சிங் சித்துவும் இடம்பெற்றுள்ளார். ஆனால், முதலமைச்சர் அமரீந்தருக்கும், சித்துவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. முதலமைச்சரின் செயல்களை சித்து நேரடியாகவே விமர்சித்து வந்தார். இதனால், பஞ்சாப் அரசில் மோதல் வெடித்தது.

amarinder - updatenews360

இதன் காரணமாக அமரீந்தர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து சித்து விலகினார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில், காங்கிரஸ் மேலிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

அதாவது, அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. தலைவர் பதவிக்கு சித்து வந்து விட்டால், தன்னுடனான மோதலை மேற்கொண்டு அவர் தீவிரப்படுத்தி விடுவார் என்று முதலமைச்சர் அமரீந்தருக்கு அச்சம் எழுந்துள்ளது.

Sonia_Gandhi_UpdateNews360

இதனால், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கக் கூடாது என்று வெளிப்படையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமரீந்தர் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

பஞ்சாப் காங்கிரஸில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வர பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத்திற்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் முதலமைச்சர் அமரீந்தரை சந்திக்க சண்டீகர் சென்றுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைமையில் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சித்துவுக்கு காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாபில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரையும், தலீத் சமூகத்தை சேர்ந்த ஒருவரை செயல் தலைவராகவும் நியமிக்க மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ அமரீந்தர் சிங் – சித்து இடையிலான அதிகார மோதலில் சித்துவுக்கே இலாபம் கிடைத்துள்ளதாக அம்மாநில அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 156

0

0

Leave a Reply