“மாநிலத்தில் நுழைய எங்கள் அனுமதி வேண்டும்”..! சிபிஐக்கு தடை போட்டது பஞ்சாப் அரசு..!

10 November 2020, 4:17 pm
amarinder_singh_updatenews360
Quick Share

பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மாநிலத்தில் வழக்குகளை விசாரிப்பதற்கான மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) வழங்கியிருந்த பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது. மேலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாஜக அல்லாத பல மாநிலங்களுடன் தற்போது பஞ்சாபும் இணைந்துள்ளது. 

மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை ஏற்கனவே சிபிஐக்கு தங்கள் பொது ஒப்புதலை வாபஸ் பெற்ற மாநிலங்களாகும்.

நவம்பர் 8’ம் தேதி பஞ்சாப் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டத்தின் கீழ் வரும் சிபிஐ, மாநிலத்தில் எந்தவொரு வழக்கையும் விசாரிக்க அதன் முன் ஒப்புதல் தேவைப்படும் என அறிவித்துள்ளது.

“டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன சட்டம், 1946’இன் பிரிவு 6’ஆல் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவதில், பஞ்சாப் அரசு டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன உறுப்பினர்களுக்கு அளித்த பொது ஒப்புதலை இதன்மூலம் திரும்பப் பெறுகிறது.” என பஞ்சாப் உள்துறை மற்றும் நீதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“முன்னர் வழங்கப்பட்ட அனைத்து பொது ஒப்புதல்களையும் ரத்து செய்வதன் அடிப்படையில், மேற்கூறிய சட்டத்தின் 3’வது பிரிவின் கீழ் ஏதேனும் குற்றம் அல்லது வர்க்க குற்றங்களை சிபிஐ விசாரிப்பதற்கு பஞ்சாப் அரசின் முன் ஒப்புதல் தேவைப்படும்.” என்று அது மேலும் கூறியது.

இது தொடர்பாக 2018’ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அங்கு நடந்த 2015 தியாக சம்பவங்கள் குறித்து விசாரிக்க சிபிஐயின் அனுமதியை பஞ்சாப் அரசு முன்பு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது..

Views: - 18

0

0