சிறுமியைக் கடத்த மகனுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த தாய்..! பஞ்சாபை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

27 September 2020, 4:23 pm
Girl_Kidnap_UpdateNews360
Quick Share

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் தனது 19 வயது மகனுக்கு 16 வயது சிறுமியை கடத்த உதவியதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்-மகன் இருவரையும் போலீசார் கைது செய்து வியாழக்கிழமை இரவு சிறுமியை அவர்களது உறவினரின் வீட்டில் இருந்து மீட்டனர்.

செப்டம்பர் 23 இரவு, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு குற்றம் சாட்டப்பட்ட பெண் மனிஷா அவரது மகன் அபிஷேக் மற்றும் அவரது மகள் உட்பட 6 பேருடன் சேர்ந்து கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களுடன், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து அடாவடியாக சிறுமியின் பெற்றோரைத் தூக்கி எறிந்து பலவந்தமாக சிறுமியை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

சிறுமியின் தாய், காவல்துறைக்கு அளித்த புகாரில், அபிஷேக் அடிக்கடி தனது மகளைத் தாக்கியதாகவும், உள்ளூர்வாசிகள் கூட அதை அறிந்திருப்பதாகவும் கூறினார். இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் வியாழக்கிழமை இரவு மைனர் சிறுமியை தாய்-மகன் இருவரின் உறவினரின் வீட்டிலிருந்து மீட்டனர்.

மேலும் மனிஷா மற்றும் அபிஷேக் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் பல்விந்தர் சிங், மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன எனத் தெரிவித்தார்.

பெற்ற மகனின் அடாவடியை தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்தாமல், சிறுமியை கடத்துவதற்கு உடந்தையாக செயல்பட்ட சம்பவம் பஞ்சாபை உலுக்கியுள்ளது.

Views: - 1

0

0