ஐடி வேலையை உதறிவிட்டு தாயுடன் பழைய பஜாஜ் ஸ்கூட்டரில் 40 ஆயிரம் கி.மீ., பயணம் : எதுக்கு தெரியுமா? இந்த காலத்துல இப்படி ஒரு மகனா?

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 7:14 pm
Scooter With Mother - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஐடி நிறுவன வேலையை உதறிவிட்டு தாயுடன் ஸ்கூட்டரில் புண்ணிய தீர்த்த யாத்திரை மேற்கொண்ட மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி நிறுவனம் ஒன்றின் முன்னாள் ஊழியரான மைசூரை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தாயை இதுவரை சுமார் 40,000 கிலோ மீட்டர் தொலைவு பல்வேறு கோவில்களுக்கு தீர்த்த யாத்திரையாக அழைத்து சென்றுவிட்டு தற்போது திருப்பதிக்கு வந்துள்ளார்.

மைசூரை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி கிருஷ்ணகுமார் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருடைய தாய் சூடரத்னம்மா. தந்தை இறந்து விட்ட நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த தக்ஷிணாமூர்த்தி கிருஷ்ணகுமார் ஒருநாள் வீட்டில் தன்னுடைய தாயுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் தான் சென்று வந்த ஊர்கள், கோவில்கள் ஆகியவற்றை பற்றி தாயிடம் கூறினார். மேலும் நீங்கள் கடந்த காலத்தில் சென்று வந்த கோயில்கள் பற்றி கூறுங்கள் என்று தாயிடம் அவர் கேட்டார்.

அப்போது அந்த தாய் இதுவரை நான் பெங்களூருக்கே சென்றது கிடையாது என்று கூறினார். இதனால் தன் நிலை உணர்ந்த அவர் உடனடியாக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு தந்தை ஞாபாகார்த்தமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ஷேதக் ஸ்கூட்டரை மராமத்து செய்தார்.

இந்த நிலையில் தாயை அழைத்துக் கொண்டு இந்தியாவில் உள்ள கோவில்கள் மட்டுமே அல்லாமல் மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளில் உள்ள கோவில்களுக்கும் செல்ல முடிவு செய்தார்.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி அவர்களுடைய புண்ணிய தீர்த்த யாத்திரை ஸ்கூட்டரில் புறப்பட்டது. அப்போது முதல் அருணாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்கள் முதல் ஆந்திரா வரை அவர்களுடைய புண்ணிய தீர்த்த யாத்திரை சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் நடைபெற்று உள்ளது. இது தவிர மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் சென்று அவர்கள் அங்குள்ள கோவில்களிலும் வழிபட்டுள்ளனர்.

தங்களுடைய யாத்திரை துவங்கியது முதல் கோவில்கள், மடங்கள் ஆகியவற்றிற்கு செல்வது, இறைவனையும் மடாதிதிபதிகள், பீடாதிபதிகள் ஆகியோரை வணங்குவது என்று காலம் சென்று கொண்டுள்ளது. உடல் ஒத்துழைக்கும் வரை எங்களுடைய தீர்த்த யாத்திரை தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Views: - 230

0

0