ராகுல் காந்தி மகா நடிகர்..! மும்பைக்கு சென்றால் அமோக வாழ்க்கை..! பாஜக எம்எல்ஏ நக்கல்..!

22 May 2020, 9:46 pm
bjp_mla_surendra_singh_updatenews360
Quick Share

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ சுரேந்திர சிங், ராகுல் காந்தி மிகச் சிறந்த நடிகர் என்பதால் அரசியலில் இருந்து விலகி மும்பைக்கு சென்றால் நல்ல வாழ்க்கை உள்ளது என கூறினார்.

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடிப்பதை போலவே காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும் வாக்குகளுக்கும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

புது டெல்லியில் சுக்தேவ் ஃப்ளைஓவர் அருகே ராகுல் காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவுடன் உரையாடிய ஒரு வாரத்திற்குப் பிறகு சுரேந்திர சிங்கின் கடுமையான தாக்குதல் வந்துள்ளது.

ஊடகங்களுடன் பேசிய அவர் மேலும் கூறுகையில், “நாம் நாட்டை காங்கிரஸிலிருந்து காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்கள் காங்கிரஸிற்கு வாக்குகளைத் தவிர்ப்பது அவசியம்.” என்று கூறினார்.

நீண்டகால அயோத்தி தகராறு தொடர்பான சமீபத்திய தீர்மானம் குறித்து கேட்டபோது, மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் உள்ள கோயில்-மசூதி தகராறுகள் இதேபோன்ற தீர்வுகளை பெற வேண்டும் என்று சுரேந்திர சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply