ஆர்யன் கான் விவகாரம்: ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி கடிதம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

Author: kavin kumar
3 November 2021, 11:46 pm
Quick Share

ஆர்யன் கான் விவகாரத்தில் நாடே உங்களுடன் உள்ளது என்று ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மும்பை சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 28-ம் தேதி ஆர்யன் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதைதொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் அக்டோபர் மாதம் 30 ம் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார்.இந்நிலையில், ஆர்யன் கான் ஜெயிலில் இருந்த நேரத்தில் அக்டோபர் 14-ம் தேதி ஷாருக்கான் மற்றும் கவுரி கான் ராகுல் காந்தி ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் “எந்தக் குழந்தையையும் இதுபோன்று நடத்தக்கூடாது. மக்களுக்காக நீங்கள் செய்த நற்பணிகள் குறித்து நான் அறிவேன். அவர்களின் ஆசீர்வாதமும், நல்லெண்ணமும் உங்களுக்கு எப்போதும் துணையிருக்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்காக நான் வருந்துகிறேன். விரைவில் உங்கள் மகனுடன் ஒன்றாக சேர்ந்திருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 315

0

0