“வசதி படைத்த நண்பர்களுக்காகவே EIA” பாஜக மீது ராகுல்காந்தி காட்டம்..!

10 August 2020, 12:21 pm
Quick Share

நாட்டின் வளங்கள் கொள்ளை போவதையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11 வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவிற்கு சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து சமூக வலைதளப் பகத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, நாட்டின் வளங்கன் கொள்ளை போவதையும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு திரும்பப் பெறப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிப்பு 2020, என்பது ஆபத்தானது, எதிர் காலத்தில் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும், பணக்கார நண்பர்களுக்காகவே பாஜக அரசு என்பதற்கு, சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிவிப்பு உதாரணம் எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.