ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட டிக்கெட் பெறலாம்: ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி….!!

9 October 2020, 12:56 pm
delhi train - updatenews360
Quick Share

புதுடெல்லி: நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் என ரயில்வே நிர்வாகம் அறித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணத்தை, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் பெறமுடியும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Views: - 38

0

0