ராஜ் குந்த்ரா வழக்கு: ஷில்பா ஷெட்டியிடம் போலீஸ் விசாரணை!

Author: Udayaraman
23 July 2021, 11:12 pm
Quick Share

ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த 20ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைக்கச் சொல்லி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அவரது சிறை நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஜ் குந்த்ராவை அழைத்துக் கொண்டு அவரது பங்களாவுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தினர். பின்பு, ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஷில்பா ஷெட்டியின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 141

0

0