பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்த பாஜக கவுன்சிலர்..! பிளாக்மெயில் செய்து பாலியல் பலாத்காரம்..!
8 December 2020, 4:46 pmராஜஸ்தானின் பார்மரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், வார்டு கவுன்சிலர் ஒருவர் ஒரு பெண்ணை குளிக்கும் போது படமாக்கியதாகவும், பின்னர் அந்த வீடியோவைக் காட்டி பிளாக் மெயில் செய்த பின்னர், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் தொலைதூர உறவினர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பால்தோரா பகுதியில் நடந்துள்ளது.
எஃப்.ஐ.ஆர் படி, பாதிக்கப்பட்டவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பால்தோராவில் உள்ள ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். பாஜகவைச் சேர்ந்த காந்திலால் எனும் வார்டு கவுன்சிலர், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோவது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்நிலையில் காந்திலால் குளிக்கும் போது தன்னைப் படம்பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடியோவை காட்டி பிளாக்மெயில் செய்த பின்னர், அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது மட்டுமல்லாமல், காந்திலால் அந்தப் பெண்ணை தனது நண்பரான ஜோத்ராமுடன் பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதோடு நிற்காமல் வீடியோவை வைரல் செய்துவிடுவதாக மிரட்டி, பல முறை அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர். ஒரு கட்டத்தில் துன்புறுத்தல் எல்லை மீறியதால், வெகுண்டெழுந்த பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை அணுகியுள்ளார்.
இதையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்துள்ள காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
0
0