கழுத்தளவு தண்ணீரில் மக்கள்.! வெள்ளத்தில் மூழ்கிய ஜெய்ப்பூர்.!
14 August 2020, 8:19 pmராஜஸ்தான் : கனமழை காரணமாக ஜெய்ப்பூர் நகரமே வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், பலத்த மழை காரணமாக, பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 12 மணி வரை சுமார் 125 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நகரின் பல வீதிகள் கழுத்து வரை நீரில் மூழ்கியுள்ளன.
இடைவிடாத மழையில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் விட வேண்டியிருந்தது. நீர் ஓட்டம் மிக வேகமாக இருந்ததால் அதில் கார்கள் மிதந்து சென்றன. மாநில அரசு 13 பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் மீட்பு நடவடிக்கையை நடத்தி வருகிறது.
நகரத்திலும், மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் மேலும் ஒன்று அல்லது இரண்டு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ள சூழ்நிலையில், சிரமங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகம் பெரும்பாலான அலுவலகங்களை மூடியுள்ளது.
ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக பாறைகள் விழுந்ததால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து திசை திருப்பப்படுவதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரின் 13 பகுதிகளில் மீட்பு குழுக்கள் மீட்க அனுப்பப்பட்டன.
கழுத்தளவு தண்ணீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தள்ளிக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.