தோல்வி அடைந்தது பாஜக சதி..! உற்சாக களிப்பில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

14 August 2020, 7:02 pm
Ashok_Gehlot_UpdateNews360
Quick Share

ஜெய்ப்பூர்: ஆட்சியை கைப்பற்ற பாஜக போட்ட சதித்திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி உள்ளார்.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அதிகார சண்டையில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் பிணக்கு ஏற்பட்டது. பைலட்டின் துணை முதலமைச்சர் பதவி, கட்சி தலைவர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.

1 மாதம் கடந்தும் நீடித்து வந்த சர்ச்சையில் திடீர் திருப்பமாக பிரியங்கா காந்தியையும், ராகுலையும் பைலட் சந்தித்து பேசினார். அதில் சமரசம் ஏற்பட, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு கவிழாமல் தப்பியது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கெலாட் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சந்தோஷம் நிரம்பி இருக்கிறது. பாஜக சதி திட்டம் தோல்வி அடைந்துவிட்டது.

இந்த வெற்றி ராஜஸ்தான் மக்களின் வெற்றி. நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார். முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட், எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் அரசுக்கு ஆதரவாகவே மாறிவிட்டது என்று கூறினார்.

Views: - 11

0

0