மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை..! இரவு நேர ஊரடங்கை நீடித்தது ராஜஸ்தான் அரசு..!

14 April 2021, 9:34 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை இரண்டு மணி நேரம் நீட்டிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இன்று ராஜஸ்தானில் 29 இறப்புகள் மற்றும் 6,200 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ராஜஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, இப்போது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும். முன்னதாக, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இதை செயல்படுத்த அரசு முடிவு செய்திருந்தது.

அனைத்து அரசு அலுவலகங்களும் மாலை 4 மணிக்குப் பிறகும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பிறகும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (ஆர்.பி.எஸ்.இ) கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசு, எட்டாம் வகுப்பு, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை தேர்வுகளை நடத்தாமல் அடுத்த வகுப்புக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில்கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ராவும் கலந்து கொண்ட கூட்டத்தின் பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Views: - 23

0

0