காதலில் உறுதியாக நின்ற பெண்..! ஆணவக் கொலை செய்த அண்ணன்..! ராஜஸ்தானில் கொடூரம்..!

25 October 2020, 12:58 pm
Honour_Killing_Rajasthan_UpdateNews360
Quick Share

ராஜஸ்தானில் ஒரு நபர் தனது சகோதரியை, அவர் காதலித்த நபரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இறந்த 22 வயது பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அவரது சகோதரர் ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள பிவாடி நகரில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் பவன் என அடையாளம் காணப்பட்டார். 24 வயது இளைஞனான பவன் ஏர் கண்டிஷனர் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இறந்தவர் விஷ்ணு என்ற நபரை நேசித்துள்ளார். அவர் தனது சகோதரர் பவனின் கடையில் வேலை செய்தார்.

காதலை மறக்க பெண் மறுத்ததால் 24 வயதான அந்த நபர் தனது சகோதரியின் தலையை பல முறை தரையில் மோதி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். பலியான பெண் மற்றும் அவர் காதலித்த விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் இந்த கொலை நடந்துள்ளது.

விஷ்ணுவும் பலியான பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்குத் தயாராக இல்லை. விஷ்ணுவும் பவனின் கடையில் தனது வேலையை விட்டுவிட்டார். இதற்கிடையில், பெண்ணின் குடும்பம் பெண்ணுக்கு அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளது.

இருப்பினும், அந்த பெண் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தார். அவரது முடிவால் பெண்ணின் முழு குடும்பமும் பதற்றமடைந்தது. சம்பவம் நடந்த நாளில், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணின் தலையை தரையில் அடித்து, சம்பவ இடத்திலேயே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

21’ஆம் நூற்றாண்டில் கூட, நாட்டின் சில பகுதிகளில் தங்கள் குடும்பங்களின் கௌரவத்தை இழிவுபடுத்தியதற்காக மக்கள் கொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் உள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.

இது கௌரவக் கொலைகள் என்றும் ஆணவக் கொலைகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. குடும்பத்தில் ஒருவர் தங்களுக்கு விருப்பமான ஒருவரை அல்லது அவர்களின் சமூகத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் போது இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Views: - 19

0

0