குடும்பத் தகராறு… மனைவியை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற கணவன்… தனிப்படைகள் அமைத்து விசாரணை!!

Author: Babu Lakshmanan
2 September 2023, 9:44 am

ராஜஸ்தானில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருடன் அந்தப் பெண்ணுக்கு தகாத உறவு இருப்பதாக அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், இருவருக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. மேலும், மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

உச்சகட்ட கொடுமையாக, அந்தப் பெண்ணின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் கிராமத்தில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்ட X தள பதிவில், “ஒரு நாகரீக சமூகத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடம் கிடையாது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்,” என தெரிவித்துள்ளார். இதனிடையே, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!