என்ன இது? சுத்த பைத்தியக்காரத்தனம்..! அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்

3 December 2019, 2:30 pm
Quick Share

டெல்லி: அயோத்தி வழக்கில் சன்னி வக்பு வாரியத்துக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் அதிரடியாக அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக, இது பார்க்கப்பட்டது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்து இருந்தது. வழக்கில் சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் ராஜீவ் தவான்.

அயோத்தி தீர்ப்புக்கு பிறகு, தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டல்கள் வருவதாகவும் கூறி இருந்தார். இந் நிலையில் வழக்கில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து ராஜீவ் தவான் கூறி இருப்பதாவது: ஜமைத்தின் பிரதிநிதியான இஜாஜ் அகமது மூலம், வழக்கில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் தருகிறார்கள்.

அதற்கான முறையான கடிதத்தையும் அனுப்பிவிட்டோம் என்று கூறுகின்றனர். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் விலக்கப்பட்டு விட்டதாக சொல்கின்றனர்.

சுத்த பைத்தியகாரத்தனமாக இருக்கிறது. என்னை நீக்குவதற்கு அவர்கள் உரிமை இருக்கலாம். ஆனால், அதற்காக சொன்ன காரணம் முற்றிலும் தவறானது. அதில் உண்மையில்லை என்றார்.

1 thought on “என்ன இது? சுத்த பைத்தியக்காரத்தனம்..! அயோத்தி வழக்கில் நீக்கப்பட்ட ராஜீவ் தவான் ஆவேசம்

Comments are closed.