மாநிலங்களவையில் தொடர்ந்து அநாகரீகம்..! மூன்று ஆம் ஆத்மி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த வெங்கையா நாயுடு..!

3 February 2021, 11:37 am
Rajya_Sabha_UpdateNews360
Quick Share

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களானசஞ்சய் சிங், நரேன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய மூன்று பேரையும், இன்று நாள் முழுவதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு புதிய வேளாண் சட்டங்கள் குறித்த முழக்கங்களுக்கிடையில் எம்.பி.க்களை சபையில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவை நடவடிக்கைகளை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

“எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். நான் 255 விதியின் கீழ் உங்கள் மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்ய நிர்பந்திக்கப்படுகிறேன்.” என்று ஆம் ஆத்மி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கு முன்பு வெங்கையா நாயுடு கூறினார்.

இதற்கிடையில், அவையை சுமூகமாக நடத்த மாநிலங்களவையில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டுவதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பற்றி விவாதிக்க அதிக நேரம் ஒதுக்குகின்றன.

மேலும் விவாதத்தின் போது விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து கட்சிகள் தங்கள் பிரச்சினைகளை எழுப்ப முடியும்.

முன்னதாக நேற்று, மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் எதிர்ப்பு பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரசும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சலசலப்பை ஏற்படுத்தியதால், மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0