இந்திரா காந்தியின் பழைய வீடியோவை வெளியிட்ட பாஜக..! பூமி பூஜை நேரடி ஒளிபரப்பை எதிர்ப்பவர்களுக்கு சாட்டையடி..!
2 August 2020, 7:46 pm1980’ஆம் ஆண்டில் டிடி நேஷனலில் ஒளிபரப்பப்பட்ட, தியோபந்தில் பேசிய இந்திரா காந்தியின் உரையின் வீடியோவை பாரதீய ஜனதா கட்சி தற்போது பகிர்ந்துள்ளது. மேலும் அரசுக்கு சொந்தமான சேனலில் ராமர் கோவில் பூமி பூஜையை நேரடி ஒளிபரப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை விமர்சிப்பதாகக் கூறியுள்ளது.
மிகவும் அரிதான அந்த வீடியோ தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் இந்திரா காந்தி, “தாருல் உலூம் உண்மையான இஸ்லாமிய பாரம்பரியத்தில் இந்தியாவிற்கும் உலகிற்கும் தொடர்ந்து சேவை செய்வார்” என்று சொல்வதைக் கேட்கலாம்.
“டி.டி.யில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை ஒளிபரப்பை எதிர்க்கும் நபர்கள், டி.டி.யில் ஒளிபரப்பிய இந்திராவின் தியோபந் வருகை பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்?” என தனது ட்விட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 5’ம் தேதி அரசு நடத்தும் தூர்தர்ஷனால் ராமர் கோவிலின் பூமி பூஜை ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக கடும் போராட்டத்தை பதிவு செய்து, நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை அடுத்து பாஜகவின் அறிக்கை வந்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கடிதத்தில், அயோத்தியில் நடத்தப்படவுள்ள மதச் செயல்பாட்டை ஒளிபரப்ப தூர்தர்ஷனைப் பயன்படுத்துவது தேசிய ஒருமைப்பாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்று வாதிட்டது.
அயோத்தியில் உள்ள கோவில் நீண்ட காலமாக மோதலின் மையமாக இருந்ததால், அதன் விழாவின் ஒளிபரப்பைத் தவிர்க்க வேண்டும் என்று அது மேலும் கூறியுள்ளது.
“தூர்தர்ஷனின் செயல்பாட்டை நிர்வகிக்கும் பிரசர் பாரதி சட்டம், பிரிவு 12 2(அ)’இல், அதன் நோக்கம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளையும் நிலைநிறுத்துவதாகும் என்று தெளிவாகக் கூறுகிறது.” என்று தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், இடதுசாரிகள் நாட்டின் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், சீனாவில் அதன் தலைவர்கள் கூட இந்தியாவில் கடையை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
இதற்கிடையில், ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5’ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0