வலுவான, வளமான, இணக்கமான தேசமாக பிரதிநிதித்துவப்படுத்தும் ராமர் கோவில்..! அத்வானி வாழ்த்து..!
4 August 2020, 10:51 pmராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு முன்னதாக, மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி இன்று உரையாற்றினார். ராமர் கோவிலின் பூமி பூஜை விழா தனக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான நாளாக இருக்கும் என்று கூறினார்.
ராம் ஜன்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரான அத்வானி, “ராம் ஜன்மபூமி இயக்கத்தின் போது, விதி என்னை 1990’ல் சோம்நாத் முதல் அயோத்தி வரை ராம் ரத யாத்திரையின் வடிவத்தில் ஒரு முக்கிய கடமையைச் செய்ய வைத்தது என்று நான் தாழ்மையுடன் உணர்கிறேன். அதன் எண்ணற்ற பங்கேற்பாளர்களின் அபிலாஷைகள், ஆற்றல்கள் மற்றும் உணர்வுகளை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ராமர் கோவில் இந்தியாவை ஒரு வலுவான, வளமான, அமைதியான, இணக்கமான தேசமாக பிரதிநிதித்துவப்படுத்தும். அனைவருக்கும் நீதி மூலம், நல்லாட்சியின் சுருக்கமான ராம் ராஜ்யத்தில் நாம் உண்மையிலேயே ஈடுபட முடியும்.”என்றார்.
அதே சமயம், 92 வயதான அத்வானி தனது வயது மற்றும் நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக நாளை அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990’ல் அப்போதைய பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தனது ராம் ரத யாத்திரையை ஆரம்பித்த பின்னர் ராம் ஜன்மபூமி பிரச்சினை அரசியல் புயலாக மாறியது. அப்போது பாஜகவில் தேசிய அலுவலராக இருந்த மோடி அத்வானியின் ராம் ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.