ராமர் கோவில் பூமி பூஜை..! ராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!!

5 August 2020, 8:36 am
deepotsav_updatenews360
Quick Share

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீப ஒளியேற்றும் நிகழ்வின் ஒரு பகுதியாக லக்னோவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தீபங்களை ஏற்றி வழிபட்டார்.

இந்த மெகா நிகழ்வுக்கு முன்னதாக புனித நகரமான அயோத்தியில் விளக்கு ஏற்றப்பட்டபோதும் கான்பூர் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடந்தன. விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தொண்டர்கள் கான்பூரில் மண் விளக்குகளை ஏற்றினர்.

இன்று அயோத்தியில் பூமி பூஜை தொடங்கும் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நாக்பூரில் ராம்சரித் மனஸ் மற்றும் அனுமான் சலிசா ஆகியவற்றை ஓதி வழிபடுவார்கள்.

“பூமி பூஜை சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் வசிக்கும் ஸ்வயம் சேவக்குகள் தீபத்தை ஒளிரச் செய்து அனுமன் சலிசா மற்றும் ராம்சரித் மனஸ் (முறையே ஹனுமான் மற்றும் ஸ்ரீராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாரம்பரிய நூல்கள்) பாராயணம் செய்வார்கள்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த மெகா நிகழ்வின் போது அயோத்தியில் உள்ள வீடுகளும் கட்டிடங்களும், திரேதா யுகத்தைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

இன்று அயோத்தியில் நடைபெறும் பிரமாண்ட பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசிலிருந்து வெளியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இருந்து பல பிரமுகர்கள் இதில் கலந்து கொல்வதைக் கருத்தில் கொண்டு அயோத்தியைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட ஆதித்யநாத், ராம் ஜன்மபூமி முடிவு குறித்த சர்ச்சை முடிவதை காங்கிரஸ் கட்சி பார்க்க விரும்பவில்லை என்று கூறினார். அவர் மேலும் “சாதி மற்றும் மதத்தின் பெயரில் போலி மதச்சார்பின்மை அரசியலின் காலம் முடிவடைந்து விட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 7

0

0