தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. பெங்களூருவில் தனியார் பள்ளிகள் தற்காலிகமாக மூடல் : ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 2:46 pm

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. பெங்களூருவில் தனியார் பள்ளிகள் தற்காலிகமாக மூடல் : ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி!

கர்நாடக தலைநகர் பெங்களூரில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த தண்ணீர் பஞ்சம் இப்போது பெங்களூரில் இருக்கும் கல்வி நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் பன்னர்கட்டா சாலையில் உள்ள அபீக் அகாடமி என்ற தனியார் வீட்டுப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அந்த பள்ளி மூடப்படுவதாகவும் அடுத்த வாரம் உள்ள நிலைமையைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அந்த பள்ளியின் நிறுவனர் இந்திரா ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரமாக ஆழ்துளைக் கிணறு வறண்டு கிடக்கிறது,. தண்ணீர் டேங்கர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், அவர்கள் வரவில்லை. தண்ணீர் டேங்கர்கள் இப்போது அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களால் உடனடியாக நீரைப் பெற முடியவில்லை.. தண்ணீர் இல்லாமல் எங்கள் பள்ளியை நடத்தினால் அது அபாயத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

எனவே, பிரச்சினை தீரும் வரை, பள்ளியைத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளோம். பெற்றோருக்கும் இது குறித்துக் கூறியுள்ளோம். அவர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள்” என்றார்.

தனியார்ப் பள்ளிகள் மட்டுமில்லை அரசுப் பள்ளிகளுக்கும் கூட இதே நிலை தான். அங்கே ஓசகெரேஹள்ளியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போர்வெல் தண்ணீர் இல்லாததால், குடிநீருக்குத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…