பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு: போலி வழக்கு என சுரேஷ் ரத்தோர் தகவல்

3 July 2021, 9:52 pm
Quick Share

உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஜவாலாபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர். இவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஹரித்வார் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபுதாய் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே வழக்கு குறித்து பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோர் கூறுகையில், ‘எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மிரட்டி பணம் பறித்ததற்காக சிறைக்குச் சென்றவர்கள் எனக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டு, என் மீது போலி வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்கை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

Views: - 95

0

0