நாட்டின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு: லேசான அறிகுறிகள்…தீவிர கண்காணிப்பு..!!

13 July 2021, 5:20 pm
Quick Share

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பரவல் உலகம் முழுவதும் தொடங்கியது. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிக மோசமாக முடக்கி வரலாறு காணாத உயிரிழப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா பரவலின் 3வது அலையை எதிர்கொண்டு வருகிறது.

Delhi Corona- Updatenews360

இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டது என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்திய மருத்துவர் சங்கமும் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளா திருச்சூரை சேர்ந்த 21 வயது மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவி சீனாவின் வூஹானில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி நாடு திரும்பினார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சுமார் 1 மாதம் மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாத சிகிச்சையைத் தொடர்ந்து அம்மாணவி குணமடைந்தார்.

Corona_Kerala_Updatenews360

இந்நிலையில், தற்போது டெல்லி பயணம் மேற்கொள்ள அம்மாணவி திட்டமிட்டிருந்தார். இதற்காக கொரோனா பரிசோதனைகளை அவர் மேற்கொண்டார். ஆன்டிஜன் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கூறப்பட்டது. ஆனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சூர் மாவட்ட மருத்துவர்கள் அந்த மாணவியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Views: - 193

0

0