கேரளாவிற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா

Author: Udhayakumar Raman
17 October 2021, 8:04 pm
Quick Share

கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதனிடையே கேரளா மாநிலம் கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேரும் உயிரிழந்தனர். பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 183

0

0