கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : சபரிமலை பக்தர்களுக்கு புதிய சிக்கல்!!

3 December 2020, 11:11 am
Pinarayi Vijayan- Updatenews360
Quick Share

கேரளா : புரெவி புயலால் கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேரள முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் உதவ தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கொல்லம், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கனமழையுடன் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் புயல் கரையை கடக்கும் வரை சபரிமலை கோவில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க பத்தினம் திட்டா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0