பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு:மத்திய அரசு அறிவிப்பு

Author: kavin kumar
3 November 2021, 9:43 pm
Quick Share

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல்உள்ளிட்டவை ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவற்றின் விலை உயர்வு மக்களை வாட்டி வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் இருந்து 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் இருந்து 10 ரூபாயும் குறைத்துள்ளது. இதனால் நாளையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய இருக்கிறது. கலால் வரியை குறைத்ததற்கு ஏற்றவாறு மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு சுமையை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Views: - 295

0

0