அர்னாப் கோஸ்வாமிக்கு தொடரும் சிறை வாசம் : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்..!!

5 November 2020, 8:07 pm
arnab goswami - updatenews360
Quick Share

மும்பை : பிரபல செய்தி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும், அவரது தாயாரும் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு பிரபல செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தான் காரணம் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அன்வய் நாயக்கின் மகள் அதன்யா நாயக் அளித்த புதிய புகாரின் அடிப்படையில், அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார். மேலும், கோஸ்வாமியின் தொலைக்காட்சியில் இருந்து நிலுவைத் தொகை செலுத்தாதது தொடர்பான புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை அவரது வீட்டிற்கே சென்று மும்பை போலீசார் கைது செய்தனர். அங்கு வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், கைது நடவடிக்கைக்கு முன்னதாக போலீசார் தன்னை தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் அளித்துள்ளார்.

கோஸ்வாமியின் கைது நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவதேகர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அர்னாப் கோஸ்வாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Views: - 37

0

0