பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா.. செல்லாதா..? குழப்பத்தில் பொதுமக்கள் : முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி..!!

25 January 2021, 6:03 pm
100 Rupees - Updatenews360
Quick Share

மும்பை : பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு வர்த்தகர்கள் மற்றும் வணிகஸ்தர்கள் ஏற்கவில்லை என்றும், இது வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய வரிசை நோட்டுக்களை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. பழைய வரிசை நோட்டுக்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது வரை ஏதும் இல்லை, எனக் கூறப்பட்டுள்ளது.

Views: - 16

0

0