யார் இந்த “ஏயு”..? தெரியாத நம்பருக்கு தொடர்ந்து 44 அழைப்புகள்..! வசமாக சிக்கிய ரியா சக்ரவர்த்தி..?

11 August 2020, 7:49 pm
rhea_updatenews360
Quick Share

பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தியின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் பதிவு (சிடிஆர்) சிபிஐ கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. ‘ஏயு’ எனத் தொடங்கும் அறியப்படாத ஒருவருக்கு பல அழைப்புகளை ரியா செய்ததாக அழைப்பு பதிவு காட்டுகிறது.

ரியா சக்ரவர்த்திக்கு ‘ஏயு’விலிருந்து 17 அழைப்புகள் வந்துள்ள நிலையில், ரியா சக்ரவர்த்தி ‘ஏயு’விற்கு 44 அழைப்புகள் மேற்கொண்டுள்ளார்.

ஒரு அழைப்பு ஜூன் 13 அன்று, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு ஒரு நாள் முன்பும், மற்றொரு அழைப்பு ஜூன் 15 அன்று செய்யப்பட்டது.

இதற்கிடையே காதலன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி, நேற்று உச்சநீதிமன்றத்தில் நியாயமற்ற ஊடக அறிக்கைகள் மற்றும் நடிகரின் மரணத்திற்கு தன்னை குற்றவாளி என்று அறிவிக்க முயற்சிப்பது குறித்து புகார் அளித்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

தனது 11 பக்க வாக்குமூலத்தில், ராஜ்புத்தின் மரண வழக்கில் தன்னை அரசியல் காரணங்களுக்காக பலிகடாவாக்கக் கூடாது என்று சக்ரவர்த்தி கூறியதுடன், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தனக்கு எதிராக பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை அடுத்து, இந்த வழக்கு ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்றும், தொடர்ச்சியான பரபரப்பை ஏற்படுத்துதல் காரணமாக மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், தனது தனியுரிமையை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக கடந்த மாதம், ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங், ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 6 பேர் மீது பாட்னாவில் புகார் அளித்திருந்தார். அவர்கள் தனது மகனின் தற்கொலைக்கு தூண்டியதாக அதில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0