சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ.5,000 பரிசுத் தொகை : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
28 November 2021, 9:07 am
road accident - updatenews360
Quick Share

சென்னை : சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காக்கும் விதமாகவும், ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்தப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் சிக்கியவர்களை, பொன்னான நேரத்தில் மருத்துவனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும்.

ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஐந்து முறை பரிசுத்தொகை வழங்கப்படும். சாலை விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் போலீசார், விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துகளையும், மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும், மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் உதவி செய்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 257

0

0